மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மணமுனை பாலத்தின் கீழ் உள்ள வாவியில் வலை வீசி மீன் பிடிப்பதற்காக சென்ற நபர், நேற்று (29) சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

ஆற்றில் இறங்கிய இவர் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது ஆழமான பகுதிக்கு தவறுதலாக சென்றதால் அதிலிருந்து மீள முடியாமல் காணாமல் போயுள்ளதாக தெரியவருகிறது.

தமிழர் பகுதியில் பெரும் துயரை ஏற்படுத்திய சம்பவம் ; சோகத்தில் கதறும் நான்கு பிள்ளைகள் | Tragic Incident In Tamil Area

மேலதிக விசாரணை

கோவில் குளம் பிரதேசத்தைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான 49 வயதுடையவரே உயிரிழந்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

உடற்கூற்று பரிசோதனைக்காக சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments