தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் கச்சதீவு அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு (Narendra Modi) கடிதம் ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது.

குறித்த கடிதத்தை ஜனசெத்த பெரமுன கட்சியின் தலைவர் பத்தரமுல்ல சீலரத்தன தேரர் (Baththaramulle Seelarathana Thero) மற்றும் ஒரு குழுவினர் இன்று (02) இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் கையளித்துள்ளனர்.

இதையடுத்து, ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த தேரர், “விஜய் தேர்தலில் வெற்றிப் பெற்று கச்சதீவை மீள எடுத்துக் கொண்டால் யாழ்ப்பாணத்தில் இருக்கும் கடற்றொழிலாளர்கள் எங்கே போவார்கள் அவர்களுக்கு எதுவும் செய்ய முடியாமல் போகும்.

தமிழ் நாட்டில் மட்டுமா தமிழர்கள் இருக்கிறார்கள், இச் செயற்பாடு மீண்டும் பெரும் பிரச்சினையை ஏற்படுத்த கூடியது.

தளபதி விஜய் யார்? அவர் ஒரு நடிகர், விஜய்க்கு எதிராக அல்லது இலங்கையில் எதிர்க்கட்சி எந்தவித கருத்தும் தெரிவிக்கவில்லை.

இலங்கை மற்றும் இந்திய நட்புறவிற்கு தீங்கு ஏற்படும் இந்த கருத்துக்கு ஒன்றும் சொல்லவில்லை, எதிர்க்கட்சி எங்கிருக்கின்றது.

விஜய்யின் கருத்து மீண்டும் ஒரு பயங்கரவாத செயற்பாடுகளை ஆரம்பிக்க நோக்கிலானதா ? அவருக்கு குறித்த தீவை பெற்றுக் கொள்ளாவிட்டால் நித்திரை போகாது என்கிறார், அவரின் மனைவி இலங்கை சேர்ந்தவர் அதனால் நாம் இந்திய பிரதமருக்கு கச்சதீவை வழங்க வேண்டாம் என்று கடிதம் எழுதியுள்ளோம்” என அவர் தெரிவித்துள்ளார்.

இறுதிப்போரில் தகர்க்கப்பட்ட பாலம் : நிர்மாணப் பணிகளை ஆரம்பித்து வைத்த அநுர

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments