ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் யாழ் மற்றும் கச்சதீவு விஜயத்தின் பின்னர் பல விடயங்கள் பேசுபொருளாகியுள்ளது.
கச்சத்தீவை விட்டுக்கொடுக்க முடியாது என்பதையும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க உறுதியாக தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், இந்தியாவிற்கும் இலங்கைக்குமான தொடர்பில் காணப்பட்ட conectivity project என்பதை அநுர அரசாங்கம் முற்றிலுமாக தவிர்க்க அல்லது மறுக்க ஆரம்பித்துவிட்டார்கள் என்று ஓய்வுநிலை சிரேஸ்ட நிர்வாக சேவை அதிகாரி இரேனியஸ் செல்வின் தெரிவித்தார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இந்த விடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது இன்றைய ஊடறுப்பு நிகழ்ச்சி…