யாழ்ப்பாணம் கொக்குவில் கல்வாரி தேவாலயத்திற்கு அருகிலுள்ள வெற்றுக் காணியொன்றில் இருந்து ஆணொருவரின் சடலம் இன்று(05) கண்டெடுக்கப்பட்டுள்ளது.

கொக்குவில் பகுதியை சேர்ந்த சிவசாமி தனபாலசுந்தரம் என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

யாழ். போதனா வைத்திய சாலையில் சடலம்

சடலம் மீட்கப்பட்டு, உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்திய சாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

 சம்பவம் தொடர்பில் கோப்பாய் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments