அம்பாறையில் வீடொன்றில் தனித்திருந்த குடும்பப் பெண்ணொருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் தலைமறைவாகியிருந்த பிரதான சூத்திரதாரியின் சகோதரன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அம்பாறை – பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விஷ்ணு கோயில் வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் தனித்திருந்த 38 வயது மதிக்கத்தக்க இரண்டு பிள்ளைகளின் தாயான மனோதர்ஷன் விதுஷா என்ற குடும்பப்பெண் கடந்த மே மாதம் வெள்ளிக்கிழமை(30) படுகொலை செய்யப்பட்டிருந்தார்.

குறித்த பெண்ணின் படுகொலை தொடர்பில் கடந்த ஜுன் மாதம் 25 ஆந் திகதி சந்தேகத்தின் அடிப்படையில் குறித்த பெண்ணின் வீட்டில் பணிப்பெண்களாகப் பணியாற்றிய நிலையில் சகோதரிகளான இரட்டையர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குடும்பப் பெண் படுகொலை இருவர் கைது ; யாழ் சென்ற அம்பாறை CID பிரிவு | Ampara Cid Jaffna Arrested Murder Family Woman

இவ்வாறு கைது செய்யப்பட்ட இரு சந்தேக நபர்களும் கல்முனை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வந்தனர்.

விசாரணையில் ஏதோ ஒரு அடிப்படையில் தொய்வு ஏற்பட்டதை உணர்ந்த படுகொலை செய்யப்பட்ட குடும்பப்பெண்ணின் கணவர், ஜனாதிபதி உட்பட பொலிஸ்மா அதிபர் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் என பல தரப்பினருக்கு உரிய நீதி கோரி படுகொலை சூத்திரதாரிகள் என நம்பப்படும் பலரது பெயரை சமூக ஊடகங்களில் வெளிப்படுத்தி இருந்தார்.

இதனடிப்படையில் அம்பாறை மாவட்ட குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்து களுவாஞ்சிக்குடி பகுதியில் உள்ள நகைக்கடை உரிமையாளர் தான் படுகொலையின் பிரதான சூத்தரதாரி என கண்டறிந்துள்ளதுடன் குறித்த கடையில் பணியாற்றிய உரிமையாளரின் சகோதரர் உட்பட பணியாளர் ஒருவரையும் நேற்று (05) கைது செய்தனர்.

குறித்த கைது நடவடிக்கையை அறிந்த பிரதான சந்தேக நபர் தற்போது அவரது சொந்த இடமான யாழ்ப்பாணத்திற்கு தப்பி சென்ற நிலையில், சந்தேக நபரை தேடி அம்பாறை மாவட்ட குற்றப்புலனாய்வு பிரிவினர் யாழ்ப்பாணத்திற்குச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments