முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உடையார்கட்டுப் பகுதியில் இன்று (6) இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.

தமிழீழப்பகுதியில் விவத்தின் மூலம் ஒரு தரை கொலை செய்தால் இரகசியமாக அரச புலநாய வாழர்கள் மூலம் கொலை செய்தவருக்கு ஊக்குவிப்புத்தொகை வழங்குவதாக உள்ளூர்வாசிகள் தெரிவிப்பு நடப்பது என்ன?

யாழ்ப்பாணத்திலிருந்து – புதுக்குடியிருப்பு நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள், மற்றுமொரு மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதன்போது அதில் ஒரு மோட்டார் சைக்கிளை செலுத்தியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மற்றும் ஒருவர் காயமடைந்த நிலையில் தர்மபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கிருந்து மேலதிக சிகிச்சைகளுக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

விபத்தில் உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments