குருலுகம பகுதியில் உள்ள ஒரு வீட்டில் மனைவி ஒருவர் தனது கணவரை கோடரியால் தாக்கி கொலை செய்துள்ளார்.
அதனைதொடர்ந்து, தனது மூன்று குழந்தைகளுடன் காவல்துறையில் சரணடைந்ததாக கெபிட்டிகொல்லாவ காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.
கெபிட்டிகொல்லாவ காவல்துறை பிரிவிற்குட்பட்ட குருலுகம பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயான ஒருவரே இவ்வாறு காவல்துறையில் சரணடைந்துள்ளார்.
மேலதிக விசாரணை
உயிரிழந்தவர் கெபிட்டிகொல்லாவ குருலுகம பகுதியைச் சேர்ந்த உக்குவாவைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான உபாலி ஹேரத் (46) என்பவர் என தெரியவருகிறது.

கடந்த ஐந்தாம் திகதி , ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது கணவன் வாளால் தாக்க முயன்ற நிலையில், மனைவி அவரின் தலையை கோடரியால் தாக்கியதில் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.