கொழும்பு பல்கலைக்கழக மாணவி ஒருவர் விபத்தில் உயிரிழந்துள்ளார்.  தனது தந்தையுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த போது விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த ஹம்பாந்தோட்ட, பந்தகிரிய பகுதியை சேர்ந்த 22 வயதுடைய மாணவி  சிகிச்சை பலனின்றி உயிரிந்துள்ளார். பந்தகிரிய பகுதியில் இருந்து மோட்டார் சைக்கிளில் செல்லும் வழியில் தந்தையும் மகளும் விபத்துக்குள்ளாகியுள்ளனர்.

பல்கலை மாணவிக்கு நடந்த பெரும் துயரம் ; தந்தை கண் முன்னே நடந்தேறிய சம்பவம் | Great Tragedy For Uni Student Before Fathe

கோர விபத்து

சம்பவம் தொடர்பில் மாணவியின் தந்தை தெரிவித்ததாவது,

என் மகள் கொழும்பு பல்கலைக்கழகத்திலிருந்து வீட்டிற்கு வந்தார். மாலையில் பேருந்து இல்லாததால், அவரை நான் என் மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்றேன். மகள் தலைக்கவசம் அணியவில்லை. எங்களுக்கு முன்னால் ஒரு முச்சக்கர வண்டி வந்தது.

கோர விபத்து பின்னால் வந்த ஒரு வேன் திடீரென வலதுபுறம் திரும்பி முச்சக்கர வண்டியைக் கடந்து சென்றது. நாங்கள் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் எங்கள் முன்னால் இருந்த வேனின் வலது பக்கத்தில் மோதியதால் நாங்கள் தூக்கி வீசப்பட்டோம்.

எனக்கு சுயநினைவு திரும்பிய போது, ​​நான் மருத்துவமனையில் இருந்தேன். எனது வலது காலும் வலது கையும் காயமடைந்தன. எனது மகளின் தலையில் இருந்து இரத்தம் கசிந்திருந்தது. 9 நாட்கள் சிகிச்சையளிக்கப்பட்ட போதிலும் மகள் உயிரிழந்து விட்டார்.” என தெரிவித்துள்ளார்.  

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments