அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் தீவிர ஆதரவாளரான சார்லி கிர்க், பல்கலைக்கழகத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிக் கொண்டிருந்தபோது சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 31 வயதான சார்லி கிர்க், காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு அறுவைச் சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

 பல்கலை நிகழ்வில் பேசிக்கொண்டிருந்தபோது சம்பவம்

உட்டா பல்கலைக்கழக நிகழ்ச்சியில் சார்லி கிர்க் அமர்ந்து மாணவர்களுடன் உரையாடுவதும், அப்போது அடையாளம் தெரியாத ஒருவர் அவரை அவரது கழுத்தில் சுட்டுக் கொல்வதும் காணொளியில் பதிவாகியுள்ளது.

 அவரை சுட்டுக் கொன்றவர் யார்? எதற்காக சுட்டார் என்பது குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. மேலும், ஸ்வாட் பிரிவு காவல் துறையினர் சுட்டுக் கொன்றவர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சுட்டுக்கொல்லப்பட்ட சார்லி கிர்க்கிற்கு எரிக்கா என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.

ட்ரம்ப் வெளியிட்ட பதிவு

சார்லி கிர்க்கின் மரணத்தை உறுதிப்படுத்திய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தன்னுடைய ட்ரூத் சோஷியல் பக்கத்தில் பதிவு ஒன்றையும் பகிர்ந்துள்ளார்.

அந்தப் பதிவில், “தி கிரேட் புகழ்பெற்ற சார்லி கிர்க் மரணமடைந்துவிட்டார். அமெரிக்காவில் உள்ள இளைஞர்களின் மனதை சார்லியைவிட யாரும் புரிந்துகொண்டது இல்லை. அவர் அனைவராலும் நேசிக்கப்பட்டார், புகழப்பட்டார்; ஆனால், அவர் தற்போது நம்மிடம் இல்லை.

சார்லியின் மறைவுக்கு அவரது மனைவி எரிக்காவுக்கு என்னுடைய மனைவி மெலனியா மற்றும் என்னுடைய சார்பில் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். நாங்களை உன்னை நேசிக்கிறோம் சார்லி!” எனப் பதிவிட்டுள்ளார் ட்ரம்ப்.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments