முல்லைத்தீவு உடையார்கட்டு தெற்கு குரவில் பகுதியில் சிறுமி ஒருவர் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

கடந்த 9ஆம் திகதி உடையார் கட்டு தெற்கு குரவில் பகுதியில் வசிக்கும் 15 வயதுடைய சிறுமி ஒருவரை சுதந்திரபுரம் பகுதியை சேர்ந்த 23 வயது இளைஞன் ஒருவர் வீடொன்றிற்கு இரவு வேளை அழைத்து சென்று துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியுள்ளார்.

தமிழர் பகுதியில் தவறான நடத்தைக்கு உள்ளாக்கப்பட்ட 15 வயது சிறுமி | Girl Abused In Tamil Area Two Youths Arrested

சிறுமி துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியமையை அறிந்த உறவினர்கள் புதுக்குடியிருப்பு பொலிஸில் முறைப்பாடு வழங்கியதற்கமைவாக குறித்த சிறுமியை துஷ்பிரயோகபடுத்திய குற்றச்சாட்டில் 23 வயதுடைய இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும், அவர்களுக்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில் வீட்டின் உரிமையாளரான 23 வயதுடைய இன்னுமொரு இளைஞனும் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட இருவரும் புதுக்குடியிருப்பு பொலிஸாரின் விசாரணையின் பின்னர் தடயவியல் பொலிஸாரின் அறிக்கையோடு முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தபடவுள்ளனர். 

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments