மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிலுள்ள புன்னைச்சோலை பகுதியில் வீடு ஒன்றின் கதவை உடைத்து உள் நுழைந்த திருடர்கள் பணம் மற்றும் நகைகளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவமானது, நேற்றையதினம்(13) இடம்பெற்றுள்ளது.

 தங்க ஆபரணங்கள் திருட்டு

சுமார் 80 இலட்சம் ரூபா பெறுமதியான 33 அரை பவுன் கொண்ட தங்க ஆபரணங்களையும், 20 இலட்சத்து 80 ஆயிரம் ரூபா பணத்தை திருடிச்சென்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

தமிழர் பகுதியில் வீட்டை உடைத்து பாரியளவு பெறுமதியான பணம் - நகை திருட்டு | Batticaloa House Robbery Cash Gold

சம்பவ தினமான நேற்று இரவு குறித்த வீட்டில் அனைவரும் நித்திரையில் இருந்துள்ளனர். இதன் போது வீட்டின் சமையலறையில் பகுதி கதவை உடைத்து வீட்டுக்குள் உள்நுழைந்த திருடர்கள் அங்கு அறைகளில் அலுமாரியில் வைக்கப்பட்டிருந்த 20 லட்சத்து 80 ஆயிரம் ரூபா பணம் மற்றும் சுமார் 33 அரை பவுன் கொண்ட தங்க ஆபரணங்களை திருடிச் சென்றுள்ளனர்.

இதனையடுத்து பொலிஸ் நிலையத்தில் பாதிக்கப்பட்ட வீட்டு உரிமையாளர் முறைப்பாடு செய்ததையடுத்து பொலிஸார் தடவியல் பிரிவு அதிகாரிகள் அழைக்கப்பட்டு தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments