தமிழ் மக்களின் உரிமைக்காக 12 நாட்கள் உணவையும் நீரையும் ஒறுத்து உயிர்த் தியாகம் செய்த தியாகதீபம் திலீபனின் 38வது ஆண்டு நினைவேந்தல் இன்று ஆரம்பமாகின்றது.

நல்லூர் ஆலயம் அருகே அவர் உண்ணாவிரதம் இருந்த இடத்தில் இன்று காலை 9.00 மணியளவில் அஞ்சலி நடைபெற்று தொடர்ந்து நல்லூரில் அமைந்துள்ள திலீபன் நினைவிடத்தில் நினைவேந்தல் ஆரம்பமாகும்.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல் துறை பொறுப்பாளரான திலீபன் இந்திய அமைதிப் படையிடம் ஐந்து அம்சக் கோரிக்கைகளை 1987 செப்டம்பர் 15 ஆம் திகதி முன்வைத்து உணவையும் நீரையும் தவிர்த்து போராட்டத்தை முன்னெடுத்தார்.

ஐந்து அம்சக் கோரிக்கை

கடந்த 38 வருடங்களுக்கு முன்னர் 23 வயதுடைய பல்கலைக்கழக மாணவனான திலீபனின்  இந்த செயல் இந்த உலகத்தை திரும்பிப் பார்க்க வைத்தது.

தமிழ் இனத்தின் விடுதலைக்காக தியாக தீபமாக மாறிய திலீபனின் நினைவேந்தல் | Thiyagi Thileepan Remembrance Day In Jaffna Nallur

தாயக கனவுடன், ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து, உண்ணா நோன்பு நோற்று 12 நாட்கள் சொட்டு தண்ணீர் அருந்தாமல் தாயக கனவுடனேயே 1987 செப்டம்பர் 26 ஆம் திகதி முற்பகல் 10.48 மணிக்கு உயிர் நீத்தார்.

தியாக வரலாற்றை நினைவுறுத்தி ஒவ்வொரு வருடமும் தியாகதீபம் திலீபன் வாரத்தில் வடக்கு மற்றும் கிழக்கு தமிழர் தாயகம் உணர்வெழுச்சி கோலம் பூண்டு சிவப்பு மஞ்சள் வர்ண நினைவு அலங்காரங்களால் அலங்கரிக்கப்பட்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments