கிளிநொச்சி மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் வசமிருந்த முப்பது ஏக்கர் வரையான காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன.

கடந்த 2009 ஆண்டு முதல் பாதுகாப்பு படையினர் வசமிருந்த தனியார் மற்றும் அரச காணிகள் கட்டம் கட்டமாக விடுவிக்கப்பட்டு வந்துள்ளன.

அதன் தொடர்சியாக கிளிநொச்சி மாவட.டத்தின் பூனகரி பிரதேச செயலாளர் பிரிவின் கீழுள்ள பொன்னாவெளி கிராம அலுவலர் பிரிவிலுள்ள 07 ஏக்கர் காணி கடந்த (07-09-2025) அன்று விடுவிக்கப்பட்டு பிரதேச செயலாளரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

மேலும் விடுவிக்கப்பட்ட காணிகள்

குறித்த காணி தற்காலிகமாக மரமுந்திரிகை கூட்டுத்தாபனத்திடம் பொறுப்பில் கையளிக்கப்பட்டுள்ளதாகவும் இதே போன்று நல்லூர் கிராம அலுவலர் பிரிவிலுள்ள முட்கொம்பன் பகுதியில் இராணுவத்தினர் வசமிருந்த 20 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சியில் பாதுகாப்பு படையினர் வசமிருந்த காணிகள் விடுவிப்பு! | Lands Held By Security Forces Have Been Released

அத்துடன், பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவின் கீழுள்ள இயக்கச்சி பகுதியில் இராணுவத்தினர் வசமிருந்த தனியாருக்கு சொந்தமான எட்டுப் பேரின் காணியும் விடுவிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரச அதிபர் சுப்பிரமணியம் முரளிதரன் தெரிவித்துள்ளார்.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments