கொழும்பு அடுக்குமாடி குடியிருப்பில் வெளிநாட்டவர் ஒருவரின் சடலம் மீட்புகொழும்பு தெஹிவளையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் இருந்து கீழேஅவரை கீழே தள்ளி கொலை செய்து விட்டு அவரின் பொருட்களை கழவாடிச் சென்றுயிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது? சீன நாட்டவரின் சடலம் தெஹிவளை பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணை

தெஹிவளை பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தொலைபேசி அழைப்பை அடுத்து தெஹிவளை அல்விஸ் வீதியில் உள்ள ஒரு வீட்டின் பின்னால் சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பு அடுக்குமாடி குடியிருப்பில் வெளிநாட்டவர் ஒருவரின் சடலம் மீட்பு | The Fate Foreigner In A Colombo Apartment Building

இந்த நாட்டில் தனியார் துறையில் பணிபுரியும் சீன நாட்டினர் குழு ஒன்று இந்த வீட்டிற்கு அருகிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் தங்கியிருந்ததாகவும், குறித்த நபர் மேல் மாடியில் இருந்து விழுந்து இறந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

சடலம் தற்போது கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் குறித்து தெஹிவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments