உடுதும்பர, தம்பகஹபிட்டிய, ஹபுதண்டுவல பிரதேசத்தில் தாய் ஒருவர் தனது மூன்று பிள்ளைகளுக்கு விஷத்தைக் கொடுத்துவிட்டு தானும் விஷம் அருந்தி உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.
சம்பவத்தில் 32 வயதான குறித்த தாய் மட்டுமே உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த பெண்ணின் கணவர் இரண்டு நாட்களுக்கு முன்னர் உயிரிழந்துள்ளதுடன், 34 வயதான அவர் லுகேமியா (இரத்தப் புற்றுநோய்) காரணமாக உயிரிழந்துள்ளார்.
மனநல பாதிப்பு
அத்துடன், 12, 10 மற்றும் 5 வயதுடைய மூன்று ஆண் பிள்ளைகளும் லுகேமியா நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

எவ்வாறாயினும், அப்பிள்ளைகள் உடுதும்பர பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன், அவர்களது உயிருக்கு எவ்வித ஆபத்தும் இல்லை என காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த நிலையில், உயிரிழந்த பெண் மனநல பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி, சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.