17 வயது மாணவனுக்கு முகம் சுழிக்கும் செயலில் ஈடுபட்ட ஆசிரியருக்கு நேர்ந்த கதிஇந்தியா திருப்பூர் மாவட்டம் மங்கலம் சாலை பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வரும் 17 வயது மாணவனுக்கு கணித ஆசிரியர் தனது அந்தரங்க உறுப்பின் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் வாயிலாக அனுப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், 

கடந்த சில நாட்களாக செல்போனை அதிகமாக பயன்படுத்தியதை கவனித்த பெற்றோர், சந்தேகத்தின் பேரில் அவரிடம் கேள்வி எழுப்பினர்.

17 வயது மாணவனுக்கு முகம் சுழிக்கும் செயலில் ஈடுபட்ட ஆசிரியருக்கு நேர்ந்த கதி | Teacher Sexually Harassing 17 Year Old Student

அப்போது, மாணவன் தன் கணித ஆசிரியரிடம் பேசுவதாக கூறியுள்ளார். இதையடுத்து, மாணவனின் தந்தை அவரது செல்போனை சோதனை செய்தபோது அதில் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன.

பொலிஸார் தெரிவித்ததாவது,

ஆசிரியர் தனது அந்தரங்க உறுப்பின் புகைப்படங்களை மாணவனுக்கு இன்ஸ்டாகிராம் வாயிலாக அனுப்பியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதைக் கண்ட சிறுவனின் தந்தை, திருப்பூர் மத்திய பொலிஸ் நிலையத்தில் முறைபாடு அளித்துள்ளார். இந்நிலையில் பொலிஸார் ஆசிரியரை கைது செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையின் போது, மாணவனுக்கு அந்தரங்க உறுப்பின் புகைப்படங்களை அனுப்பியதும், பாலியல் தொல்லை கொடுத்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, ஆசிரியருக்கு எதிராக POCSO சட்டத்தின் கீழ் (Protection of Children from Sexual Offences Act) வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டுள்ளார்.ஆசிரியர்களே இப்படியான வேலைகளை மறந்தும் கூடச் செய்ய வேண்டாம்?

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments