கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பேராற்று வெளி ஷாஹிரா பாலர் பாடசாலைக்கு சில காடையர்கள் தீ வைத்துள்ள சம்பவவொன்று பதிவாகியுள்ளது.

குறித்த சம்பவமானது நேற்றுமுன்தினம்(19) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த காட்டுமிராண்டித்தனமான செயலை கண்டித்து பல தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

தீவிர விசாரணை

இந்த ஈனத்தனமான தாக்குதல் குறித்து தீவிர விசாரணை நடத்த, உடனடியாக தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டனர்.

கந்தளாய் ஷாஹிரா பாலர் பாடசாலைக்கு காடையர்கள் தீ வைப்பு: தடயவியல் நிபுணர்கள் ஆய்வு | Fire To Shahira Preschool In Kantalai

அவர்கள், தீ வைப்புக்கு பயன்படுத்தப்பட்ட பொருட்கள் மற்றும் குற்றவாளிகளின் தடயங்களைச் சேகரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இந்தத் தாக்குதல் காரணமாக, அப்பாவி குழந்தைகளின் எதிர்காலத்துடன் தொடர்புடைய பாலர் பாடசாலையின் பத்துக்கும் மேற்பட்ட பிளாஸ்ட்டிக் கதிரைகள் மற்றும் மின் அளவையும் எரிந்து நாசமாகியுள்ளது.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments