நுவரெலியா -லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வலஹா தோட்டத்தில் காணாமல்போன குடும்பஸ்தர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த சடலமானது நேற்றையதினம்(25) மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வலஹா தோட்டத்தைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான கா.கிருஷ்ணசாமி (வயது 70) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

பொலிஸார் விசாரணை

நேற்று முன்தினம் பிற்பகல் 2 மணியளவில் காணாமல்போன இவரை உறவினர்கள் மற்றும் தோட்ட மக்கள் இணைந்து தேடியபோது, நேற்று தேயிலைத் தோட்டப் பகுதியில் சடலமாகக் காணாப்பட்டுள்ளார்.

காணாமல்போன குடும்பஸ்தர் சடலமாக மீட்பு! | Missing Family Member S Body Recovered

இது தொடர்பில் லிந்துலை பொலிஸார் விசாரணைகளை மேற்கெண்டு வருகின்றனர்.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments