மன்னாரில் சற்று முன் கடும் பதற்றம் ; பொலிஸார் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்ட பொருட்கள்
மன்னாரில் மக்களின் எதிர்ப்பை மீறி நூற்றுக்கணக்கான கலகம் அடக்கும் பொலிஸார் பாதுகாப்புடன் காற்றாலை கோபுரங்கள் அமைப்பதற்கான பொருட்கள் பாரிய வாகனங்களில் வண்ணார் நகரை நோக்கி கொண்டுவரப்பட்டு கொண்டிருக்கின்றது.
இந்த நிலையில் ஒன்று கூடிய பல நூற்றுக்கணக்கான மக்கள் மற்றும் அருட்தந்தையர்கள் இணைந்து மன்னார் நுழைவு பகுதியில் போராட்டம் ஒன்றை நடத்தி வருகின்றனர்.

மன்னாரில் பதற்றம் கலகமடக்கம் பொலிஸாரின் பாதுகாப்புடன் குறித்த காற்றாலை கோபுரத்துக்கான பொருட்கள் எடுத்துச் செல்லப்பட்டு கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் மன்னார் நகர பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டிருக்கின்றது.