தமிழக வெற்றிக்கழக பிரசார கூட்டத்தில் சிக்கி மக்கள் உயிரிழந்த சம்பவம் குறித்து தவெக தலைவர் விஜய் (Vijay) பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
இது குறித்த பதிவை சற்றுமுன்னர் அவர் தனது உத்தியோகப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
குறித்த பதிவில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “இதயம் நொறுங்கிப் போய் இருக்கின்றேன்.
தாங்க முடியாத வார்த்தைகளால் சொல்ல முடியாத வேதனையிலும் துயரத்திலும் உழன்று கொண்டிருக்கிறேன்.
கரூரில் உயிரிழந்த எனதருமை சகோதர சகோதரிகளின் குடும்பங்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்களையும் மற்றும் இரங்கலையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.
மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர், விரைவில் குணமடைய பிரார்த்திக்கின்றேன்” என அவர் தெரிவித்துள்ளார்.