யாழ். போதனா வைத்தியசாலையில் (Teaching Hospital Jaffna) சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் தாயொருவர் உயிரிழந்துள்ளார்.

டச்சுவீதி – உடுவில் மேற்கு, சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த 29 வயதான ஒரு பிள்ளையின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்

இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், ”குறித்த பெண்ணுக்கு வயிற்றுவலி காரணமாக கடந்த 19.05.2025 அன்று வயிற்றில் சத்திர சிகிச்சை ஒன்று மேற்கொள்ளப்பட்ட போது அவருக்கு வயிற்றில் ஒரு குழாய் வைக்கப்பட்டது.

குழாயினை அகற்றுவதற்காக சத்திர சிகிச்சை 

அந்த குழாயினை அகற்றுவதற்காக கடந்த 24ஆம் திகதி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்ட நிலையில் மறுநாள் (25) சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

யாழில் சத்திரசிகிச்சையின் பின் இளம்தாய் உயிரிழப்பு - வயிற்றில் வைக்கப்பட்ட குழாய் | Young Mother Died After Surgery In Jaffna Hospital

இந்தநிலையில் சத்திர சிகிச்சை நிறைவில் குறித்த இளம்தாய் உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டதுடன் சாட்சிகளை சுன்னாகம் காவல்துறையினர் மேற்கொண்டனர்.

இரத்த நாளங்களுக்குள் இரத்த கசிவு ஏற்பட்டு, இரத்தப் போக்கினால் மரணம் ஏற்பட்டதாக உடற்கூற்று பரிசோதனைகளில் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments