யாழில் வயலுக்கு வரம்பு கட்டச் சென்ற நபர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவமானது நேற்றையதினம்(27) இடம்பெற்றுள்ளது.
கண்டி வீதி, அரியாலை பகுதியைச் சேர்ந்த சின்னத்தம்பி ராஜபாரதி (வயது 60) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சடலமாக மீட்பு
இது குறித்து மேலும் தெரியவருகையில், இவர் அரியாலை – நாவலடி பகுதியில் கமம் செய்து வந்தார். அந்தவகையில் நேற்று (27) காலை வரம்பு கட்டுவதற்காக அங்கு சென்றுள்ளார்.

பின்னர் நேற்றிரவு வரை அவர் திரும்பி வராத நிலையில் உறவினர்கள் அவரைத் தேடிச் சென்றனர்.
இதன்போது அவர் அங்குள்ள ஆலயம் ஒன்றிற்கு அருகில் உள்ள வெளி ஒன்றில் சடலமாக காணப்பட்டார்.