தலைமன்னாரில் டி-56 ரக துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.
தலைமன்னார் கட்டுக்கரை பகுதியில் காவல்துறையினரின் ஒரு தொகை சீருடைகளும், டி 56 ரக துப்பாக்கியும், அவற்றுக்கான 67 தோட்டாக்களும், ஏனைய துப்பாக்கிகளுக்குப் பயன்படுத்தக்கூடிய 25 தோட்டாக்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

எனினும் கைப்பற்றப்பட்ட தோட்டாக்கள் பயன்படுத்த முடியாதவை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.