பிரித்தானியாவின் முக்கிய நகரங்களில் ஒன்றான மன்செஸ்டரின் புறநகர்ப் பகுதியில் உள்ள ஒரு யூதர்களின் சினகொக் ஆலயத்தில் இன்று காலை நடத்தப்பட்ட கத்திக்தாக்குதலில் இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர். தாக்குதலாளியும் காவல்துறையால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

பிரித்தானியாவில் ஏற்கனவெ குடியேறிகளுக்கு எதிரான போராட்டங்கள் இடம்பெற்றுவரும் நிலையில் இங்கிலாந்துப் பிராந்தியத்தில் உள்ள மன்செஸ்டரில் உள்ள யூதர்களின் ஜெப ஆலயத்தில் இன்று(02.10) நடத்தப்பட்ட இந்தக் கத்திக்குத்துத் தாக்குதலில் பலியானவர்களன் போக மேலும் மூன்று பேர் ஆபத்தான நிலையில் இருப்பதாகக் கூறப்படுகிறது. 

கத்தி குத்து

ஹீட்டன் பார்க் ஹீப்ரு சபை ஜெப ஆலயத்துக்கு அருகில் பாதசாரிகள் மீது ஒரு வாகனம் மோதியபின்னர் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிகிறது.

கொலைக் களமான பிரித்தானிய நகரம்! குற்றவாளியை சுட்டுக் கொன்ற காவல்துறை | Stabbing Attack At One Of Uk S Major Cities

Image Credit: BBC

முதலில் குறித்த ஆலயத்தின் பாதுகாப்பு காவலர் கத்தியால் குத்தப்பட் பின்னர் ஏனையோர் குத்தப்பட்டுள்ளனர்.

இதன் பின்னர், அந்த இடத்துக்கு சென்ற காவற்துறையினர் தாக்குலை நடத்திய நபரை சுட்டுக் கொன்றனர். யூதர்களின் புனித விரத நாளான யோம் கிப்பூர் தினத்தில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 

கோப்ரா குழு

இந்த தாக்குதலை அடுத்து பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தலைமையில் அவசரகால “கோப்ரா” குழு கூடிய நிலையில் தற்போது பிரித்தானியா முழுவதும் உள்ள யூதர்களின் ஜெப ஆலயங்களுக்கு காவற்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

கொலைக் களமான பிரித்தானிய நகரம்! குற்றவாளியை சுட்டுக் கொன்ற காவல்துறை | Stabbing Attack At One Of Uk S Major Cities

Image Credit: LBC

இதேவேளை, தாக்குதல் சம்பவம் தொடர்பில் மேலும் இரண்டு பேரைக் கைது செய்துள்ளதாக அந்நாட்டு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும், மான்செஸ்டர் ஜெப ஆலயத் தாக்குதலை ஒரு பயங்கரவாத சம்பவமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை கூறியுள்ளது.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments