அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) காசா மீதான குண்டுவீச்சு தாக்குதல் நடத்துவதை நிறுத்துமாறு இஸ்ரேலுக்கு உத்தரவிட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ட்ரம்பின் முன்மொழிவுக்கு பதிலளிக்கும் விதமாக, அனைத்து இஸ்ரேலிய பணயக்கைதிகளையும் விடுவித்து, மத்தியஸ்தர்கள் மூலம் பேச்சுவார்த்தை நடத்த ஹமாஸ் ஒப்புக்கொண்டுள்ளது.

பணயக்கைதிகளை விடுவித்து அதிகாரத்தை ஒப்படைக்க ஹமாஸ் தயாராக இருப்பதாகக் கூறியதைத் தொடர்ந்து, ட்ரம்ப் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

இறுதி எச்சரிக்கை

ஏறத்தாழ இரண்டு வருட போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான தனது இறுதி எச்சரிக்கையை ஹமாஸ் ஓரளவு ஏற்றுக்கொண்டதை டொனால்ட் ட்ரம்ப் வரவேற்றுள்ளார்.

ஆட்டத்தை ஆரம்பித்த ட்ரம்ப்: உடனடியாக நிறுத்துங்கள் - இஸ்ரேலுக்கு பிறப்பித்த உத்தரவு | Trump Asks Israel To Stop Bombing After Gaza Deal

இருப்பினும், இது தொடர்பில் கருத்து வேறுபாடுகள் இன்னும் இருப்பதால் பேச்சுவார்த்தைகள் தேவைப்படும் என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இறுதி ஒப்பந்த‌த்திற்கு ஹமாஸ் ஏற்காவிட்டால் இதுவரை யாரும் பார்த்திடாத மோசமான விளைவுகள் ஏற்படும் என ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கடுமையாக எச்சரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments