யாழ்ப்பாணத்தில் மோட்டார் சைக்கிளில் வந்தவர்களின் கத்தி குத்தில் கடை உரிமையாளர் மரணம் காவல்துறை பிரிவிற்குட்பட்ட ஏழாலை கிழக்கு பகுதியில் வாணிப நிலையத்தில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் காரணமாக கத்திக்குத்துக்கு இலக்காகி கடை உரிமையாளர் மரணமடைந்துள்ளார்
சம்பவம் தொடர்பாக தெரிய வருவதாவது
ஏழாலை கிழக்கு பகுதியில் காணப்பட்ட வாணிப நிலையத்திற்கு மது போதையில் வந்த இரண்டு இளைஞர்கள் மிக்சர் தருமாறு கேட்டுள்ளார்கள்
மிக்சரால் வந்த வாக்குவாதம்
அப்போது கடை உரிமையாளர் மிக்சருக்குரிய பணத்தை தருமாறு கேட்டபோது மிக்சரை வாங்க வந்தவர்களுக்கும் கடை உரிமையாளர்களுக்குமிடையே வாய்த் தர்க்கம் ஏற்பட்டது.
இதன்போது கடை உரிமையாளர் மீது மிக்சர் வாங்க வந்தவர்கள் கத்திக்குத்தை மேற்கொண்டுள்ளார்கள்.
இதன்போது கடை உரிமையாளர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்

சடலம் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில்
இச் சம்பவத்தில் ஏழாலை கிழக்கு பகுதியை சேர்ந்த சிங்காராவேல் தானவன் வயது 35 என்பவரே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் தற்போது தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது

சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்களையும் சுண்ணாகம் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சம்பவப் தொடர்பான மேலதிக விசாரணைகளை சுன்னாகம் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்