விடுதலைக்காக உயிர் நீத்த குமரப்பா புலேந்திரன் உள்ளிட்ட 12 பேரின் 38 வது நினைவு தினம் இன்று வல்வெட்டித்துறை தீருவில் நினைவு இடத்தில் அனுஷ்டிக்கப்பட்டது.
நினைவு சுடர் ஏற்றி நினைவுச் சுடரேற்றி மலர் மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதன்போது வல்வெட்டித்துறை நகர சபை தவிசாளர் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.கே சிவாஜிலிங்கம், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் சட்டத்தரணி காண்டீபன் மற்றும் ஆதரவாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.




