எங்களுடன் மீண்டும் போரிட வாருங்கள். அப்போது இந்தியாவின் போர் விமானங்கள், இடிபாடுகளின் கீழ் புதைக்கப்படும் என பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் தெரிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பயங்கரவாதிகள் கடந்த ஏப்ரல் 22ஆம் திகதி துப்பாக்கிச் சூடு நடத்தியதில் சுற்றுலாப் பயணிகள் 26 பேர் உயிரிழந்தனர்.

இதற்குப் பதிலடியாக இந்திய இராணுவம், ஓபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தான் எல்லையில் இருந்த பயங்கரவாதிகளின் 9 முகாமகளை தாக்கியது.

ஓபரேஷன் சிந்தூர் 

இந்த தாக்குதலில் 100இற்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதனை தொடர்ந்து இந்திய – பாகிஸ்தான் இராணுவத்தினர் தீவிர தாக்குதலில் ஈடுபட்டனர்.

மீண்டும் போரிட வாருங்கள்.. இந்தியாவுக்கு பாகிஸ்தான் விடுத்த அதிரடி அறிவிப்பு | Pakistan Warns India Minister Khawaja Asif Modi

அதற்கு பின்னர், 4 நாட்களுக்கு பிறகு இருநாட்டு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தி இரு நாடுகளுக்கும் இடையில் மோதல் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. 

இந்நிலையில், இருதரப்பும் குறித்த போர் பற்றிய செய்திகளை அவ்வப்போது தெரிவித்து வந்ததையடுத்து, இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ”இந்தியா தன்னைப் பாதுகாத்துக் கொள்ள தேவைப்படும் போதெல்லாம் எந்த எல்லையையும் கடக்க முடியும்” என்று எச்சரித்தார். 

கடும் எச்சரிக்கை 

அதேநேரம், இந்திய இராணுவத் தளபதி உபேந்திரா திவேதி, ”உலக வரைபடத்தில் தனது இடத்தைத் தக்கவைத்துக் கொள்ள விரும்பினால்” பயங்கரவாதத்தை ஆதரிப்பதை நிறுத்த வேண்டும் எனவும் ஓபரேஷன் சிந்தூரில் காட்டிய நிதானத்தை இந்தியா அடுத்த முறையும் காட்டாது எனவும் கடுமையாக எச்சரித்திருந்தார். 

மீண்டும் போரிட வாருங்கள்.. இந்தியாவுக்கு பாகிஸ்தான் விடுத்த அதிரடி அறிவிப்பு | Pakistan Warns India Minister Khawaja Asif Modi

இதற்கிடையில், தற்போது அதற்கு பதிலளித்துள்ள பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப், இந்திய இராணுவம் மற்றும் அரசியல் தலைவர்களின் அண்மைய பேச்சுகள், மே மாத (சிந்தூர் தாக்குதல்) தோல்வியில் இழந்த அவர்களின் கறைபடிந்த நம்பகத்தன்மையை மீட்டெடுக்கும் தோல்வியுற்ற முயற்சியாகும் என குறிப்பிட்டுள்ளார். 

அத்துடன், “எங்களுடன் மீண்டும் போரிட வாருங்கள். அப்போது இந்தியா அதன் சொந்த போர் விமானங்கள் இடிபாடுகளின் கீழ் புதைக்கப்படும். பாகிஸ்தான் அல்லாஹ்வின் பெயரால் நிறுவப்பட்ட ஒரு நாடு. நமது பாதுகாவலர்கள் அல்லாஹ்வின் வீரர்கள்” என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments