துயிலும் இல்லங்களை தமிழரசுக்கட்சி தமது அரசியல் இலாபத்திற்காக பயன்படுத்துவதாக போராளிகள் மாவீரர் குடும்ப நல காப்பக தலைவர் குற்றம் சாட்டியுள்ளார்.

புதுக்குடியிருப்பு பிரதேச சபைக்கு முன்பாக இன்றையதினம் தேவிபுரம் மாவீரர் துயிலுமில்லத்தினை தாவரவியல் பூங்காவாக அடையாள படுத்துவதற்கு எதிராக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்க திட்டமிடப்பட்டிருந்தது.

புதுக்குடியிருப்பு பிரதேச சபை தவிசாளர் கரிகாலன் குறித்த தீர்மானத்தை மாற்றுவதாக கூறியதை தொடர்ந்து திட்டமிட்ட ஆர்ப்பாட்டம் நிறுத்தப்பட்டது.

போலியான செயற்பாடு

ஆர்ப்பாட்டம் திட்டமிட்ட இடத்திற்கு வருகை தந்த போராளிகள் மாவீரர் குடும்ப நல காப்பக தலைவர் தீபன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

மாவீரர் துயிலும் இல்லங்களை அரசியலுக்காக பயன்படுத்தும் தமிழரசுக்கட்சி! | Blame Against Ilankai Tamil Arasu Kachchi

மாவீரர்களின் துயிலும் இல்லங்களை தமது கட்சியின் ஆதிக்கத்தை பயன்படுத்தி தமிழரசு கட்சியினர் நிர்வாகத்தினை தெரிவு செய்து வருகின்றனர். அவ் நிர்வாகத்தில் தமது கட்சியின் முக்கியஸ்தர்களை நியமிக்கின்றனர்.

அதன் தொடர்ச்சியாக இந்த தேவிபுர துயிலும் இலத்தினையும் தாவரவியல் பூங்கா எனும் கட்டமைப்புக்கு கொண்டு வர எண்ணுகின்றனர். அதற்கு ஒருபோதும் நாங்கள் சம்மதிக்கப் போவதில்லை.

இதே போல போலியான செயற்பாடுகளை இனிமேல் முன்னெடுத்ததால் நாங்கள் வீதிக்கு இறங்கி தொடர் போராட்டங்களில் ஈடுபடுவோம் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments