யாழில் அதிகளவான மாத்திரைகளை உட்கொண்ட வயோதிபப் பெண் ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளார்.
மானிப்பாய் – சாத்தாவத்தை பகுதியை சேர்ந்தவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

அதிகளவான மாத்திரைகள்
இது குறித்து மேலும் தெரியவருகையில்,
குறித்த பெண் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இந்நிலையில் வைத்தியசாலையில் கொடுத்த மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக வீட்டில் வைத்து உட்கொண்டுள்ளார்.
இதனையடுத்து அவருக்கு சுகவீனம் ஏற்பட்டதால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.