பிரித்தானியாவும் பிரான்சும் சட்டவிரோத புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்தும் வகையில் செய்துகொண்டுள்ள One in, one out திட்டத்தின் கீழ், முதன்முறையாக 19 புலம்பெயர்ந்தோரை பிரான்சுக்கு திருப்பி அனுப்பியுள்ளது.

பிரித்தானியாவும் பிரான்சும், பிரான்சிலிருந்து பிரித்தானியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த புகலிடக் கோரிக்கையாளர்களை பிரான்சுக்கே திருப்பி அனுப்பும் வகையில் One in, one out என்னும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.

சட்டவிரோத புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கை 

பிரான்ஸ் ஏற்றுக்கொள்ளும் ஒவ்வொரு புகலிடக் கோரிக்கையாளருக்கும் பதிலாக, பிரான்சிலிருந்து வரும் ஒரு புலம்பெயர்வோருக்கு பிரித்தானியா புகலிடம் அளிக்கும்.

முதன்முறையாக புலம்பெயர்ந்தோரை திருப்பி அனுப்பிய பிரித்தானியா | Uk Under One In One Out Scheme

One in, one out திட்டத்தின் கீழ், ஒவ்வொரு புலம்பெயர்ந்தோராக பிரான்சுக்கு திருப்பி அனுப்பப்பட்டுவந்த நிலையில், முதன்முறையாக ஒரு குழுவாக புலம்பெயர்ந்தோரை பிரான்சுக்கு திருப்பி அனுப்பியுள்ளது

கடந்த வாரம், இரண்டு விமானங்களில் 19 புலம்பெயர்ந்தோரை பிரித்தானியா பிரான்சுக்கு திருப்பி அனுப்பியுள்ளதாக பிரித்தானிய உள்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதற்கு முன் தனித்தனியாக ஏழு பேர் பிரான்சுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ள நிலையில், One in, one out திட்டத்தின் கீழ் பிரான்சுக்கு திருப்பி அனுப்பப்பட்ட சட்டவிரோத புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கை 26ஆக உயர்ந்துள்ளது.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments