ஈழத்தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவதன் மூலம் ஐக்கிய நாடுகள் சபையினை தங்களுக்கேற்ற விதத்தில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என ஈழத் தமிழர்களின் சாட்சியமாக ஜெனீவாவிற்கு சென்ற சட்டத்தரணி வைஷ்ணவி தெரிவித்துள்ளார்.

பலஸ்தீனம், தென் சூடான் மற்றும் கிழக்கு ஈமோர் ஆகிய நாடுகளின் வரலாற்றை எடுத்துப் பார்த்தால் ஈழத்தமிழர்கள் எந்தக் கட்டத்தில் ஒன்றிணைந்து பயணிக்க வேண்டும் என்பதை தெரிந்துகொள்ள முடியும் என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஐபிசி தமிழின் சக்கரவியூகம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “ஈழத்தமிழர்களுக்கு இடம்பெற்றுள்ள இனப்படுகொலை அல்லது போர்க்குற்றங்கள் தொடர்பான சாட்சியங்கள் கூடியளவில் இன்னும் பதிவு செய்யப்படவில்லை என்பது தான் மிகப்பெரிய ஆதங்கமாக இருக்கின்றது.

ஐக்கிய நாடுகள் சபையின் ஊடாக நீதிப்பொறிமுறை எங்களுக்கு கிடைத்திருக்கும் நிலையில் ஐக்கிய நாடுகள் சபையினை எங்களுடைய பக்கம் திருப்புவதற்காகவும் பல்வேறு நாடுகளினுடைய ஆதரவுகளை திரட்டுவதற்காகவும் தொடர்ந்தும் நாங்கள்  வேலை செய்ய வேண்டியிருக்கின்றது.

ஐக்கிய நாடுகள் சபை எங்களைக் கூப்பிட்டு நீதி தரப் போவதில்லை எனவே நாங்கள் தொடர்ந்து போராட வேண்டும்.” என தெரிவித்தார்.

இது தொடர்பான மேலும் பல விடயங்களை கீழுள்ள காணொளியில் காண்க…

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments