தமிழீழ விடுதலை போராட்டத்தில் ஆண்களிற்குச்சமனாகப் பெண்களும் இந்தியா இலங்கைப்படைகளிற்கு எதிராகப் போராடி வென்ற பல வரலாறுகள் உண்டு ,

அவ்வகையில் பெண்களில் முதன்மை தளபதியாகயிருந்து பெண்போராளிகளை மிகவும் திறமையாகவளி நடத்தியவர் தான் பிரிகேடியர் விதுசா ஆவார்

மற்றும் லெப்ரின் விதுசன் என இரு மாவீரர்களை அக்குடும்பம் எமது போராட்டத்திற்கு உகந்து அழித்தது ,அவரின் தகப்பனார்

கணவதிப்பிள்ளை கந்தையா. கரவெட்டி யாழில் 12/10/25 இயற்கை எய்தினார் என்பதை அனைத்து தமிமிழீ உறவுகளிற்கும் தெரிவிப்பதோடு எமது இணையம் சார்பாக ஆழ்ந்த இரங்கலையும் இறிதிவணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கின்றோம்,தேசத்தின் திறல்கள் இருவரைத்தந்த
பாசத்தந்தை
பரமனடி சேர்ந்துவிட்டார்.


ஆசையாய் அவர் பெற்ற ஞானபூரணி அகிலமே வியக்கும் தாய்ப்புலியாக தாயகம் காக்க தனையீந்தார் ஆனந்தபுரத்திலே…
அக்கா விதுசாவாக
அறமும் வீரமும்
அன்பும் ஊட்டி
எமைவளர்த்த அன்னையாக,
அடக்குமுறைகளை தகர்த்தெறியக்கற்றுத்தந்த
அளப்பதற்கரிய
தளபதியாக தமிழர் விடுதலைப்பாதையில் ஆகச்சிறந்த மறப்பெண்ணாக
அக்கா என்றென்றும்
காவியத்தலைவியே…….
அவரை
எமக்குத்தந்த
அமரர் கந்தையா ஐயா
அரன்தாளடைந்துவிட்டார்.
மண்காக்க தன்னுயிர்க்கொடைதந்த
மாவீரன் தம்பி விதுசனை ஈன்ற தந்தை
ஈசனடி சேர்ந்துவிட்டார்.
ஈழதேசம் அவரை என்றென்றும் தொழுதுநிற்கும்
நேசத்தோடு பிள்ளைகள்நாம் வாடிநிற்கிறோம் வணக்கம்செய்கிறோம்
வீடுபேறு பெற்று ஐயாவின் உயிர் அமைதிகொள்ள்ளட்டும் ஆண்டவன் நிழலில்..

Share:
Subscribe
Notify of
guest

1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments