தமிழர் பகுதியில் தென்னந்தோப்பில் மீட்கப்பட்ட ஆணின் சடலம், களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருக்கள்மட பகுதியிலுள்ள தென்னந்தொப்பில் ஆண் ஒருவரின் சடலம் நேற்று (13) கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பகுதியிலுள்ள மக்கள் களுவாஞ்சிக்குடி பொலிஸாருக்கு வழங்கிய தகவலுக்கமையவே சடலம் மீட்கப்பட்டுள்ளது.

தமிழர் பகுதியில் தென்னந்தோப்பில் மீட்கப்பட்ட ஆணின் சடலம் | Man S Body Recovered In Garden

 மரண விசாரணை

களுவாஞ்சிக்குடி பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி சடலத்தை பார்வையிட்டதன் பின்னர், பிரேத பரிசோதனைகளுக்காக களுவாங்கிக்குடி ஆதார வைத்தியசாலைக்கு சடலத்தை அனுப்பி வைக்குமாறும் உத்தரவிட்டுள்ளார்.

சடலமாக மீட்கப்பட்டவர் குருக்கள்மடத்தைச் சேர்ந்த 81 வயதானவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிக்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.    

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments