யாழ்ப்பாணம் சாவகச்சேரிப் பொலிஸ் நிலைய தலைமைப் பொறுப்பதிகாரியாக ஸ்கந்தவரோதயா கல்லூரியின் பழைய மாணவன் நியமிக்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் சுன்னாகம் ஸ்கந்தவரோதயாவின் பழைய மாணவன் மணோகரன் கோணேஸ்வரன் சாவகச்சேரிப் பொலிஸ் நிலையத்தின் தலைமைப் பொறுப்பதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

சாவகச்சேரி பொலிஸ் நிலைய தலைமைப் பொறுப்பதிகாரியாக யாழ் தமிழர் | Jaffna Tamil Appointed Chavakachcheri Police

பொலிஸ்சேவையில் 35வருடங்கள் பூர்த்தி

இவர் இலங்கைப் பொலிஸ்சேவையில் 35வருடங்களை பூர்த்தி செய்தவராக காணப்படுகின்றார்.

வடக்கு மாகாணத்தில் தமிழ் பேசுகின்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள் பற்றாக்குறையாக உள்ளனர் அதனால் பொதுமக்கள் தமது பிரச்சனைகளை தெளிவுபடுத்த முடியாத நிலைமை காணப்படுகின்றது,

முறைப்பாடுகளை எழுதும் போது தவறு ஏற்படுகின்றது,நாம் கூறுவது ஒன்று அவர்கள் எழுதுவது ஒன்றாக உள்ளது என்றெல்லாம் கடந்த காலங்களில் விமர்சனம் செய்தார்கள்.

அத்தனையையும் தாண்டி இன்று வடக்கில் ஒரு பொலிஸ் நிலையத்தின் தலைமைப் பொலிஸ் பொறுப்பதிகாரியாக ஒரு தமிழ் அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments