கடந்த 2023ம் ஆண்டு ஒக்டோபர் 7ம் திகதி இஸ்ரேலுக்குள் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் புகுந்து பலரை சுட்டுக்கொன்றும் 251 பேரை பயணக் கைதிகளாக பிடித்தும் சென்றனர்.

இதனையடுத்து காசா மீது மூர்க்கதனமானதாக்குதலை நடத்திய இஸ்ரேல் படையினர் பாலஸ்தீன மக்களில் பெருமளவானோரை கொன்றுகுவித்ததுடன் ஹமாஸ் ஆயுதக்குழுவின் தலைமையையும் அழித்தனர்.

 இருந்தும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் தொடர்ந்தும் இஸ்ரேல் படையினருக்கு எதிரான போரில் ஈடுபட்டனர்.

காசாவில் தாம் மேற்கொள்ளும் இராணுவ நடவடிக்கை தமது மக்களை ஹமாஸ் பிடியிலிருந்து மீட்பதே என இஸ்ரேல் இராணுவம் தெரிவித்து வந்த போதிலும் இறுதிவரை அவர்களால் பணயக் கைதிகளாக பிடித்து வைத்திருந்த தமது மக்களை முழுமையாக மீட்க முடியாமல் போனது.

அப்படியென்றால் தமது தலைமை அழிக்கப்பட்ட பின்னரும் தாம் உயிர்ப்புடன் இன்னமும் உள்ளோம் என்ற செய்தியை ஹமாஸ் உலகத்திற்கு வெளியிட்டுள்ளது.

 அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் வந்து பாலஸ்தீன சமாதான உடன்படிக்கையை எகிப்தில் கைச்சாத்திடும் வரை 20 பணயக்கைதிகளும் பணயக் கைதிகளாக பிடிக்கப்பட்டு கொல்லப்பட்டவர்களின் சடலங்களும் ஹமாஸ் வசமே இருந்தன.

 உலகிலேயே அதி சிறந்த உளவுப்பிரிவை தன்னகத்தே வைத்திருக்கும் இஸ்ரேலுக்கு தமது பணயக் கைதிகள் வைக்கப்பட்டிருக்கும் இடத்தை கண்டு பிடிக்க முடியாமல் போனது ஏன்?

காசாவின் கடைசி எல்லை வரை தனது இராணுவ நடவடிக்கையை விஸ்தரித்த இஸ்ரேலுக்கு கடைசியில் மிஞ்சியது ஏமாற்றம்தான். என்னதான் கொடூர போரை நடத்தினாலும் அப்பாவி மக்களை கொன்றொழித்தாலும் இறுதியில் சமாதான வழிமுறை மூலமே தமது மக்களை ஹமாஸிடமிருந்து மீட்கவேண்டியிருந்தது இஸ்ரேலுக்கு. இது ஒருவகையில் இஸ்ரேலுக்கு ஒரு அவமானகரமான செயற்பாடும் கூடத்தான்.

அப்படியென்றால் தமது பணயக் கைதிகளை மீட்கவென புறப்பட்ட இஸ்ரேலுக்கு தாம் மேற்கொண்ட இராணுவ நடவடிக்கை ஒரு தோல்வி என கொள்ளலாமா…?

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments