நினைவு கூரல்கள் தொடர்பில் ஈ.பி.டி.பியின் நிலைப்பாடு உயிரிழந்த அனைத்து இயக்கங்கள் பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய வகையில் நினைவு கூருவதற்கு பொதுவான இடம் ஒதுக்கப்படுமானால் அதற்கு ஈ.பி.டி.பி ஆதரவு கொடுக்கும் என யாழ். மாநகரின் முன்னாள் முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், “நினைவு கூரும் இடம் என்பது படுகொலை செய்யப்பட்ட அல்பிரட் துரையப்பா காலத்திலிருந்து இறுதி யுத்தம் நடைபெற்ற காலம்வரை இறந்த அனைவரையும் நினைவு கூருவதாக இருக்க வேண்டும்.

வெளிநடப்பு 

அவ்வாறு நினைவு கூரலுக்கான பொதுச் சதுக்கமாக அது இருக்குமானால் எமது ஆதரவு இந்த முன்மொழிவுக்கு இருக்கும்.

நினைவு கூரல்கள் தொடர்பில் ஈ.பி.டி.பியின் நிலைப்பாடு | Sri Lankan Tamils Remembrance Day Epdp

மாறாக தனிப்பட்ட ஒரு அமைப்பின் உறுப்பினர்களை நினைவு கூருவதற்கான இடத்துக்கு எமது கட்சியின் கொள்கை நிலைப்பாடு என்றும் இணங்கிச் செல்லாது. 

எமது இந்த நிலைப்பாட்டை ஏற்றுக்கொண்டால் நாம் அது தொடர்பான விவாதத்தில் தொடர்ந்தும் இருக்கின்றோம். இல்லையேல் எமது கட்சி அந்த நிலைப்பாட்டை ஏற்றுக்கொள்காது அதற்கு எதிர்ப்பு தெரிவித்து சபையில் இருந்து வெளிநடப்பு செய்யும்” என குறிப்பிட்டுள்ளார். 

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments