சாவகச்சேரிப் பகுதியில் புகையிரதத்தால் இறங்க முற்பட்ட 53வயதான குடும்பப் பெண் தவறி விழுந்து நேற்று (16) உயிரிழந்துள்ளார்.

பல்கலைக்கழகம் ஒன்றில் கற்கும் மகனிடம் சென்று மீண்டும் வீடு திரும்பிய போதே இந்த துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

யாழில் பெரும் துயரம் ; பல்கலையில் இருந்த மகனை பார்க்க சென்ற தாய்க்கு நொடிப்பொழுதில் அரங்கேறிய சம்பவம் | Mother S Tragedy Visiting Son In College

தவறி விழுந்து பலி 

கொழும்பில் இருந்து யாழ் நோக்கி வந்த புகையிரதம் சாவகச்சேரி – சங்கத்தானையை அடைந்ததும் மேற்படி பெண் புகையிரதத்தில் இருந்து இறங்க முற்பட்டுள்ளார்.

இருப்பினும் அவர் இருந்த பெட்டியின் வாயில் ஊடாக இறங்குவதற்கு இறங்கு தளம் இல்லாத காரணத்தால் வேறு பெட்டி ஊடாக சென்று இறங்க முற்பட்ட வேளையில் புகையிரதமும் நகர்ந்ததால் பெண் கீழே விழுந்து படுகாயமடைந்திருந்தார்.

படுகாயமடைந்த பெண்ணை சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்திருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

மேற்படி விபத்துத் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரிப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments