யாழ்ப்பாணத்தை உலுக்கிய இளம் குடும்பப் பெண் படுகொலை ; நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

காரைநகர் பகுதியைச் சேர்ந்த சுரேஷ்குமார் குலதீபா என்ற இளம் குடும்பப் பெண்ணின் கொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து  முன்னெடுக்க திட்டமிடப்பட்டிருந்த போராட்டத்திற்கு நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

இது தொடர்பில் ஊர்க்காவற்றுறை நீதிமன்றத்தின் தடை உத்தரவு அறிக்கையில் குறிப்பப்பட்டுள்ளதாவது,

யாழ்ப்பாணத்தை உலுக்கிய இளம் குடும்பப் பெண் படுகொலை ; நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு | Young Family Woman Murdered In Jaffna

கண்டன பேரணிக்கு தடை

இப்படியான ஊர்வலங்கலால் எதிர்காலங்களில் சர்வேச அழுத்தங்கள் ஏற்படுவதை தவிர்ப்பதே இதின் நோக்கமனவும்,குறித்த பெண்ணின் உடல் கண்டுபிடிக்கப்பட்டு ஒருசில நாட்களே ஆன நிலையில் புலன்விசாரணை மேற்கொள்ளப்பட்டு இரண்டு சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவ்வாறான சூழ்நிலையில் கண்டனப் பேரணி ஒன்று இடம்பெறுவது புலன்விசாரணைக்கு பாதகமாக அமையும் என்பதோடு அப்பிரதேசத்தில் தேவையற்ற அமைதியின்மையையும், இது தொடர்பில் பதற்றத்தையும் தோற்றுவிக்கும் என்பதனை அனுமானிக்கக்கூடியதாகவுள்ளது.

எனவே புலன்விசாரணைகள் திருப்திகரமாக நடைபெற்று வரும் நிலையில் இவ்வாறான கண்டனப் பேரணி ஒன்று அவசியமற்ற ஒன்றாக கருதி, குறித்த கண்டன பேரணிக்கு தடை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments