இலங்கையில் உள்நாட்டு போரின் போது தமது இனத்துக்காகவும் மண்ணுக்காகவும் போராடி உயிர் நீத்த போராளிகளின் காத்திர பங்கானது எவ்விதத்திலும் ஒப்பிடமுடியாத தனித்துவமிக்கது.
இந்த தனித்துவத்தை உலகறிய செய்யும் போக்கில் ஈழ விடுதலைப்போராட்டம் தமது சாதனைகளை பதித்து வந்த நேரத்தில் 2004 மார்ச் மாதம், இடம்பெற்ற துரோகத்தின் அடையாளம் இன்றும் வடக்கு கிழக்கு என்ற பிளவு அரசியலை அடையாளப்படுத்த வித்திட்டது.
இலங்கையின் தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE) அமைப்பின் வரலாற்றில் 2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட “கருணா பிளவு” (Karuna Split) ஒரு மிகப்பெரும் பின்னடைவை அந்த அமைப்பின் நகர்வுக்கு ஏற்படுத்தியிருந்தது.
இந்தப் பிளவு விடுதலைப் புலிகள் அமைப்பின் இராணுவ மற்றும் அரசியல் வலிமையை பெரிதும் பலவீனப்படுத்தியது.
குறிப்பாக தமிழீழ விடுதலைப் புலிகளின் உளவுப்பிரிவின் தலைமை வகித்த பொட்டு அம்மானின் அடுத்த அடிக்கு பெரும் சவாலாக மாறியது.
கிழக்கின் போராட்ட அடையாளங்களை வெளிச்சத்தில் இருந்து மறைத்து, அதனை இருளுக்குள் கொண்டுசென்ற பிளவின் பின்னரான கருணா போன்ற தலைமைகளின் பங்கு ஈழப்போர் வரலாற்றில் 2004-2006 காலகட்டத்தில் இலங்கை இராணுவம் கிழக்கை எளிதாக கைப்பற்ற வழிவகுத்தது.
2006-ல் கிழக்கு போர் தோல்வியடைந்ததன் மூலம் வடக்கு முன்னணிக்கு அழுத்தம் அதிகரித்ததோடு, இது 2009 இறுதி போருக்கு பின்னடைவை ஏற்படுத்தும் இரசியங்களை இலங்கை இராணுவத்துக்கும் வெளிச்சமிட்டும் காட்டியது.
இவ்வாறு ஈழப்போரின் பெரும் அடையாளங்களை வெளியுலகுக்கு இன்றும் வியக்கும்படி வெளிப்படுத்திய போராளிகளின் பங்கு, அதன் அடிப்படை, மற்றும் கட்டமைப்புக்குள் வலுத்த பிளவுக்கான காரணம் என்பவற்றை சிரேஷ்ட மற்றும் மூத்த தமிழ் ஊடகவியளாலர் நிராஜ் டேவிட்டின் நேர்காணலில் விரிவாக ஆராய்கிறது ஐ.பி.சி தமிழின் சக்கரவியூகம் நிகழ்ச்சி…