அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உக்ரைனுக்குத் தேவைப்படும் டோமாஹாக் ஏவுகணைகளை வழங்கத் தயாராக இல்லை என்று குறிப்பிட்டுள்ளமை அந்நாட்டு ஜனாதிபதிக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.

உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி வெள்ளை மாளிகைக் கூட்டத்திலிருந்து வெறுங்கையுடன் வந்த நிலையில் குறித்த கருத்து வெளியாகியுள்ளது.

சுமுகமான இருதரப்புப் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, தானும் ட்ரம்பும் நீண்ட தூர ஏவுகணைகள் பற்றிப் பேசியதாகவும், ஆனால் “அமெரிக்கா ஒரு தீவிரத்தை விரும்பவில்லை என்பதால்” இந்த விவகாரம் குறித்து அறிக்கைகளை வெளியிட வேண்டாம் என்று முடிவு செய்ததாகவும் ஜெலென்ஸ்கி கூறியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உக்ரைன் மற்றும் ரஷ்யா

குறித்த சந்திப்பைத் தொடர்ந்து, உக்ரைன் மற்றும் ரஷ்யாவுக்கு இடையிலான போரை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று ட்ரம்ப் சமூக ஊடகங்களில் அழைப்பு விடுத்துள்ளார்.

Tomahawk பேச்சுவார்த்தை! வெள்ளை மாளிகையில் இருந்து வெறுங்கையுடன் வெளியேறிய ஜெலென்ஸ்கி | Zelensky Left Empty Handed Without Tomahawk

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுடன் தொலைபேசியில் பேசிய ட்ரம்ப் விரைவில் ஹங்கேரியில் அவரைச் சந்திக்க ஒப்புக்கொண்டதாக பேசிய ஒரு நாள் கழித்து, குறித்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.

ரஷ்ய எண்ணெய் மற்றும் எரிசக்தி வசதிகளைத் தாக்க டோமாஹாக்ஸைப் பயன்படுத்துவது புடினின் போர் பொருளாதாரத்தை கடுமையாக பலவீனப்படுத்தும் என்று ஜெலென்ஸ்கி நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

ட்ரம்ப் அதை நிராகரிக்கவில்லை என்றாலும், வெள்ளிக்கிழமை வெள்ளை மாளிகையில் அவர் பேசிய தொனி உறுதியற்றதாக இருந்தது என்றும் ஜெலென்ஸ்கி கூறியுள்ளார்.

முன்னதாக டோமாஹாக் ஏவுகணை தொடர்பிலான பேச்சுவார்த்தை வெளிவர ஆரம்பித்ததும் புடின் அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைக்கு தயாராகி வருவதாகவும் அவர் விளக்கியுள்ளார். 

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments