சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பலாலி வீதி, புன்னாலை கட்டுவன் பகுதியில் பெண் ஒருவரது தங்கச் சங்கிலியை அறுத்த சந்தேகநபர் ஒருவர் இன்றையதினம் சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்றையதினம் குறித்த பெண் அந்த வீதியில் நடந்து சென்றுகொண்டிருந்தபோது, உந்துருளியில் வந்த குறித்த சந்தேகநபர் அந்த பெண்ணின் சங்கிலியை அறுத்து சென்றுள்ளார்.

இந்நிலையில் இது குறித்து சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.
விசாரணைகளின் அடிப்படையில், சம்பவம் இடம்பெற்று 24 மணிநேரத்துக்குள் அளவெட்டி பகுதியைச் சேர்ந்த சந்தேகநபர் ஒருவரை சுன்னாகம் பொலிஸார் கைது செய்தனர்.
