பறிபோகும் மற்றுமொரு தமிழர் நிலம் : விரைவில் சட்ட நடவடிக்கை தையிட்டியில் தனியார் ஒருவருக்கு சொந்தமான காணியில் திஸ்ஸ விகாரை என்ற பெயரில் சட்டவிரோதமாக விகாரை ஒன்று கட்டப்பட்டுள்ள நிலையில் அதனை அகற்றுவதற்கான எந்தவித முடிவும் இதுவரை எடுக்கப்பட்டதாக தெரியவில்லை.

 இந்த நிலையில் யாழ்ப்பாணம் வசாவிளான் பகுதியில் சத்தம் சந்தடியின்றி தமிழர் ஒருவரின் காணியில் சிறிலங்கா இராணுவத்திற்கென இராணுவ வைத்தியசாலை ஒன்று அமைக்கப்பட்டு வருகின்றது.

 இவ்வாறு இராணுவ வைத்தியசாலை அமைக்கப்பட்டு வரும் நிலையில் காணி உரிமையாளரின் கோரிக்கையை அடுத்து ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன், தமிழரசுக் கட்சியின் தலைவர் சிவிகே சிவஞானம் மற்றும் வலி வடக்கு தவிசாளர் சுகிர்தன் ஆகியோர் களத்திற்குச் சென்று காணி உரிமையாளருடன் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை நேரில் சென்று கலந்துரையாடினர்.

மிக விரைவில் சட்ட நடவடிக்கை

தனியார் காணி உரிமையாளருடன் கலந்துரையாடிய ஜனாதிபதி சட்டத்தரணி குறித்த இராணுவ வைத்தியசாலை கட்டடத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கையை மிக விரைவில் மேற்கொள்ளவுள்ளதாக உறுதியளித்தார்

யாழ்ப்பாணத்தில் பறிபோகும் மற்றுமொரு தமிழர் நிலம் : விரைவில் சட்ட நடவடிக்கை | Military Hospital Built On Private Land In Jaffna
யாழில் 29 பேர் அதிரடியாக கைது!

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments