ஐபிசி தமிழின் அடுத்து பிரம்மாண்ட படைப்பாக உருவாகுகின்றது முழுநீள மில்லர் திரைப்படம்.
இத்திரைப்படத்திற்கான தொடக்க விழாவானது, எதிர்வரும் 26ஆம் திகதி மாலை 6.00 மணியளவில் யாழ். வலம்புரியில் இடம்பெறவுள்ளது.
ஈழத்து கலைஞர்களை முன்னிலைபடுத்தி இத்திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
தொடக்க விழா
அத்துடன், மில்லர் திரைப்படம் ஈழத்தின் மிக நீளமான திரைப்படமாக பார்க்கப்படுகின்றது.
இந்நிலையில், இத்திரைப்படத்திற்கான தொடக்க விழா, எதிர்வரும் 26ஆம் திகதி (6.00) யாழ். வலம்புரி 148/10 ஸ்டேசன் வீதியில் உள்ள The Valampuriயில் இடம்பெறவுள்ளது.
எனவே, ஈழத்து வரலாற்றில் மிகப்பிரம்மாண்டமான ஒரு விழாவாக இது அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
