ஐபிசி தமிழின் அடுத்த பிரம்மாண்ட படைப்பாக உருவாகவுள்ள முழுநீள மில்லர் திரைப்படத்தின் படப்பிடிப்பை ஆரம்பித்து வைப்பதற்காக கவிஞர் வைரமுத்து இன்று (26.10.2025) இலங்கை வரவுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ‘X’ கணக்கில் பதிவொன்றை இட்டுள்ளார்.

தனது நண்பரான பாஸ்கரன் கந்தையா தயாரிக்கும் மில்லர் படத்தின் படப்பிடிப்பை ஆரம்பித்து வைப்பதற்காக யாழ்ப்பாணம் செல்ல உள்ளதாக அவர் இந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

நல்லிலக்கியங்கள் 

அத்துடன், நல்லிலக்கியங்களும் நவகலைகளும் ஒரு போர்ச் சமூகத்திலிருந்துதான் பூத்துவர முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.

மில்லர் திரைப்படத்தின் தொடக்க விழா, இன்று மாலை 6 மணியளவில் யாழ். வலம்புரியில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments