அயர்லாந்தின் (Ireland) புதிய ஜனாதிபதியாக கேத்தரின் கோனொலி (Catherine Connolly) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
ஐரோப்பிய நாடான அயர்லாந்தில் ஜனாதிபதி தேர்தல் நடந்து முடிந்துள்ளது.
இந்தநிலையில், குறித்த தேர்தலில் இடதுசாரி சார்புடைய கேத்தரின் கோனொலி, சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்டார்.
இடதுசாரி கட்சி
இவருக்கு அந்நாட்டின் இடதுசாரி கட்சிகளான சின் பெயின், லேபர் கட்சி மற்றும் சமூக ஜனநாயக கட்சிகள் உள்ளிட்டவை ஆதரவு தெரிவித்தன.

இந்தநிலையில், அவர் தற்போதைய ஜனாதிபதியான மைக்கேல் டி ஹிக்கின்சை பின்னுக்கு தள்ளி, 63 சதவீதத்துக்கும் அதிகமான ஓட்டுகள் பெற்று பாரிய வெற்றியை பதிவு செய்துள்ளார்.
பெண் ஜனாதிபதி
இதையடுத்து, வரும் நவம்பர் 11 ஆம் திகதி அவர் ஜனாதிபதியாக பதவியேற்கவுள்ளார்.

குறித்த பெண்மனி, அயர்லாந்தின் பத்தாவது ஜனாதிபதி என்பதுடன் அயர்லாந்து வரலாற்றில் மூன்றாவது பெண் ஜனாதிபதி என்பதும் குறிப்பிடத்தக்கது.