லண்டனில் பெண்கள் எழுச்சி நாளும், மாலதியின் 38 ஆவது நினைவு நாளும் சிறப்பாக இடம்பெற்றதுடன், மாவீரர் நினைவாலய பணிகளும் இடம்பெற்றது.
லண்டன், ஒக்ஸ்போட்டில் அமைந்துள்ள உலகத் தமிழர் வரலாற்று வளாகத்தில் இன்று(27) மாலை இந்த நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது.
பெண்கள் எழுச்சி நாள்
இதன்போது, இந்தியஅமைதிப் படைக்கு எதிராக போராடி மரணமடைந்த இரண்டாம் லெப் மாலதியின் திருவுருவப் படத்திற்கு மலர் தூபி, மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், பெண்கள் எழுச்சி நாள் தொடர்பில் கருத்துரைகளும் இடம்பெற்றன.

அத்துடன், மாவீரர் நாளை முன்னிட்டு நினைவாலயம் பணிகளும் இடம்பெற்றன. இதில் புலம்பெயர் தமிழ் இன செயற்பாட்டாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.







