அட்டகாசம் ; விற்பனை நிலைய உரிமையாளருக்கு அரங்கேற்றப்பட்ட சம்பவம் மொரகொல்லாகம நகரத்தில், இரும்பு பொருட்களை விற்பனை செய்யும் நிலையம் ஒன்றுக்குள் அத்துமீறி நுழைந்த இருவர், விற்பனை நிலைய உரிமையாளரை கத்தி முனையில் மிரட்டி கை மற்றும் கால்களை கட்டி வைத்துவிட்டு 07 இலட்சம் ரூபா பணத்தை கொள்ளையிட்டு தப்பிச் சென்றுள்ளதாக மொரகொல்லாகம பொலிஸார் தெரிவித்தனர்.

கொள்ளையர்கள் இருவரும் முகமூடி அணிந்திருந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கத்திமுனையில் அட்டகாசம் ; விற்பனை நிலைய உரிமையாளருக்கு அரங்கேற்றப்பட்ட சம்பவம் | Knife Attack At Store Shocks Shop Owner

இந்த கொள்ளை சம்பவம் கடந்த 26 ஆம் திகதி மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொள்ளையர்கள் இருவரும் பணத்தை கொள்ளையிட்டு லொறியில் தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர்களை கைதுசெய்வது தொடர்பில் மொரகொல்லாகம பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments