இலங்கை பௌத்த துறவிக்கு எதிராக அவுஸ்திரேலியாவில் பாலியல் குற்றச்சாட்டுஅவுஸ்திரேலியாவில் உள்ள இலங்கையைச் சேர்ந்த பௌத்த துறவி ஒருவருக்கு எதிரான வழக்கில் அவர் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அவுஸ்திரேலியாவின் மெல்போர்னில் உள்ள பௌத்த விகாரை ஒன்றில் ஆறு சிறுமிகளை பாலியல் ரீதியாக அத்துமீறலுக்க உட்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பான வழக்கு விசாரணையில் அவர் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்டுள்ளார்.

மெல்போர்ன் – கீஸ்பரோவில் உள்ள தம்ம சரண கோவிலின் தலைமைத் துறவியான 70 வயதான நாவோதுன்னே விஜிதா, 16 வயதுக்குட்பட்ட குழந்தையை பாலியல் ரீதியாக அத்துமீறலுக்கு உட்படுத்தியதாக எட்டு குற்றச்சாட்டுகளிலும், ஒரு குழந்தையுடன் அநாகரீகமான செயலைச் செய்ததாக ஒன்பது குற்றச்சாட்டுகளிலும் குற்றவாளி என விக்டோரியா கவுண்டி நீதிமன்றம் கண்டறிந்துள்ளது.

நடுவர் மன்ற பரிசீலனை

இந்தக் குற்றங்கள் 1994 மற்றும் 2002 க்கு இடையில் நடைபெற்றதாக கூறப்படுகிறது.

இலங்கை பௌத்த துறவிக்கு எதிராக அவுஸ்திரேலியாவில் பாலியல் குற்றச்சாட்டு | Buddhist Monk Sxual Proven Guilty Australia

அதே நேரத்தில் அந்நாட்டின் நடுவர் மன்றம் இன்னும் மற்றொரு குற்றச்சாட்டை பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.

தற்போது 30 வயதாகும் பாதிக்கப்பட்ட தரப்பினர், ஒரு ஆன்மீகத் தலைவராக தனது பதவியை துஷ்பிரயோகம் செய்து, கோவிலின் ஸ்பிரிங்வேல் மற்றும் கீஸ்பரோ வளாகத்தில் உள்ள தனது குடியிருப்புக்குள் அவர்களை இவ்வாறு அத்துமீறலுக்கு உட்படுத்தியதாக விசாரணைகளின் போது சாட்சியமளித்துள்ளதான கூறப்படுகிறது.

மேலும், பல பாதிக்கப்பட்டவர்கள் காவல்துறையிடம் முறைப்பாடு அளித்ததை அடுத்து, குறித்த பௌத்த துறவி மீது 2023 இல் மேற்கண்ட குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் அந்நாட்டின் விக்டோரியன் சட்டத்தின் கீழ் அவர் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும் என அந்நாட்டு ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments