என் இனத்தின் விடுதலைக்காய்
சொந்த மண்ணே
சொர்க்கம் என்றெண்ணி
முப்படையிலும் எங்களுக்காய்
ஆகுதியானர்கள்
தமிழர்களின் சுவாசமானர்கள்
தடைகளைத் தகர்த்தெறிய
அச்சத்தினைத் தவிர்த்து
வீரத்தின் உச்சத்தினைத் தொட்டவர்கள்
இன்னல்கள் களைந்திட
மகளிர் அணியில்
தாக்குதல் நடத்தியே
பெண்ணினத்திற்கு
பெருமை சேர்த்தவர்கள்
பள்ளிப்படிப்பை பாதியிலேயே விட்டு
பெண்ணடிமையினை உடைத்து
படலைகள் திறந்து
படைகளைத் திரட்டி
சமர்க்களம் புரிந்த
இவர்கள்
எம்
கூர்வாள்

good